பொய்களை பரப்பும் எதிர்கட்சினர் மத்தியில் மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை மட்டுமே வழங்குகிறோம்! டத்தோ ரமணன்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு ஏப்ரல் 25-
எதிர்க் கட்சிகள் பொய்களை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் மக்கள் பயன் அடையும் வகையில் பயனளிக்கும் திட்டங்களை வழங்கி வருகிறோம் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ இரமணன் தெரிவித்தார்.

தெக்குன், அமானா இக்தியார், மித்ரா உட்பட பல திட்டங்கள் மூலம் மக்கள் பயன் அடைந்து வருகின்றார்கள்.

மடானி அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறோம். இது மக்களுக்கு நன்றாக தெரியும்.

ஆனால் எதிர்க் கட்சியினர் தினசரி பொய்களை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.

கோலகுபு பாருவில் அமானா இக்தியார், மித்ரா, தெக்குன், சொக்சோ, டிரா மலேசியா, தொழிலாளர் இலாகா முகப்பிடங்களை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles