மும்மொழி அகராதி புத்தகத்தை சிலாங்கூர் மந்திரி பெசாரிடம் வழங்கினார் டத்தோ கு. செல்வராஜ்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் ஏப்ரல் 25-
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் புதிய வெளியீடான மும்மொழி அகராதி புத்தகத்தை அதன் உரிமையாளர் டத்தோ கு. செல்வராஜ் இன்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரியிடம் வழங்கினார்.

இந்த மும்மொழி அகராதி புத்தகத்தை பெற்றுக் கொண்ட சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி மூன்று மொழிகளில் புத்தகம் அச்சடிக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

இது மாணவர்களுக்கு பெரும் பலனை தரும் என்று அவர் வாழ்த்தினார்.

இதனிடையே சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு அவர்களும் இந்த மும்மொழி அகராதி புத்தகத்தை பெற்றுக் கொண்டதோடு இது அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கைகளில் தவழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles