
காளிதாஸ் சுப்ரமணியம்
பத்தாங் காலி ஏப்ரல் 25-
சிலாங்கூர் மாநில அரசு இன்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஏழு தமிழ்ப் பள்ளிகளுக்கு சிறப்பு மானியம
மும் 324 மாணவர்களுக்கு தலா 300 வெள்ளி இலவச பேருந்து கட்டண பற்று சீட்டை வழங்கியது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு ஆகியோர் இன்று மாணவர்களுக்கு இந்த பற்று சீட்டுகளை எடுத்து வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் வசதிகுறைந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்று பத்தாங்காலி தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரமேஷ் ராவ் தெரிவித்தார்.
உலுசிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் 324 மாணவர்களுக்கு 97 ஆயிரத்து 200 வெள்ளி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஏழு தமிழ்ப் பள்ளிகளுக்கு சிறப்பு மானியமாக தலா 5,000 வெள்ளி வரவேற்கக்கூடியது என்றார் ராஜேஸ் ராவ்.
மேலும் உலுசிலாங்கூர் மாணவர்களுக்கு பற்றுச்சீட்டுகளும் பள்ளிகளுக்கு கூடுதல் மானியமும் வழங்கிய சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு ஆகியோருக்கு உலு சிலாங்கூர் கவுன்சிலருமான ரமேஷ் ராவ் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

