
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு ஏப்ரல் 26-
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் உள்ளூர் வேட்பாளரான கைரூல் அஸ்ஹாரி சவுத்தை பெரிக்கத்தான் நேஷனல் களமிறக்கியுள்ளது.
பெரிக்கத்தான் நேஷனல் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் நேற்றிரவு இதனை அறிவித்தார்.
கோல குபு பாரு இடைத் தேர்தலில் தேசியக் கூட்டணி வேட்பாளராக பெர்சத்து உலு சிலாங்கூர் தொகுதியின் இடைக்கால தலைவரான கைருல் அஸ்ஹாரி சவுத் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

