
காப்பார், ஏப்ரல் 26-
கொலை செய்யப்பட்ட நிலையில் வீடு ஒன்றில் ஆடவரின் சடலத்தை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
கிள்ளான் காப்பாரில் தாமான் ஜெயா வில் உள்ள வீடு ஒன்றில் படுக்கை அறைக்கு முன் இவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.பாராங் கத்தி ஏந்திய நான்கு ஆடவர்கள் மின் அதிர்வு துப்பாக்கிகளுடன் வீட்டுக்குள் நுழைவது ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.
இன்னொரு சந்தேக நபர் வீட்டுக்கு வெளியே காரில் அமர்ந்திருப்பதும் அதில் தெரிய வந்துள்ளது. கொலையாளிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது என்று கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் விஜயராவ் தெரிவித்தார்.
Bernama

