தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடி, ராகுல் காந்தி மீது புகார்

புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி மீது புகார் வந்ததையடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா நகரில் கடந்த 21-ம் தேதி பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், “மக்களிடம் உள்ள சொத்துகள் கணக்கெடுக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்து களை சட்டவிரோதமாக ஊடுருவிய வர்களுக்கு (முஸ்லிம்) பிரித்துக் கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது” என தெரிவித்தார்.

பிரதமரின் இந்த குற்றச் சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்ததுடன் மறுப்பு தெரிவித்தது. அத்துடன் பிரதமர் மோடியின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தன.

The hindu times

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles