பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்களை திசை திருப்புகிறார்! டாக்டர் சத்திய பிரகாஷ் சாடல்

கோலகுபு பாரு ஏப்ரல் 26-
பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்பி வருகின்றனர் என்று உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் சாடினார்.

ஒற்றுமை அரசாங்கம் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது தினசரி குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.இது குறித்து என்ன செய்தி கொடுத்தாலும் அதை திசை திருப்புகின்றனர்.

குறிப்பாக கொச்சை வார்த்தைகளில் மிகவும் மோசமாக திட்டுகின்றனர்.இதை பார்க்கும் போதும் நம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் இவ்வளவு கீழ்தரமாக செயல்படுகின்றனர் என்பது தான் என்னுடைய கேள்வியாகும் என்றார் அவர்.

எது எப்படி இருந்தாலும் இந்திய சமுதாயத்திற்கு தேவையானதை பிரதமர் நிச்சயம் பூர்த்தி செய்வார். அதற்கான குரலை கெஅடிலானில் உள்ள இந்திய தலைவர்களான நாங்கள் கொடுத்துக் கொண்டே இருப்போம் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles