நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் கெஅடிலான் கட்சி சார்பில் பிரபல வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி போட்டியிடுகிறார்.
அதேசமயம் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் நடப்பு உறுப்பினர் எஸ் கேசவன் போட்டியிடுகிறார் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை பிஎஸ்எம் கட்சிக்கு விட்டுத் தர பக்கத்தான் ஹரப்பான் விரும்பவில்லை.
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் கேசவனை நிறுத்த முடிவு செய்து விட்டோம் என்று கெஅடிலான் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்