
சென்னை: வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து, மக்களின் தாகத்தை தீர்க்க, நீர்-மோர் பந்தல் அமைப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ‘வெப்ப அலை வீசக்கூடும்’ என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கடும் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர்-மோர் பந்தல்களை அமைப்பதுடன், கால்நடைகள் எளிதில் நீர் பருகுவதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்போம். கோடைக் காலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவை தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.

