கோல குபு பாரு தொகுதியை ஹராப்பான் கைப்பற்றும்- மந்திரி புசார் நம்பிக்கை

உலு சிலாங்கூர், ஏப் 28 -அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் கோல குபு பாரு தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கைப்பற்றும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோலா குபு பாருவில் அமல்படுத்தப்பட்ட இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் , சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான முன்னெடுப்புகள் முந்தைய வெற்றிகளுக்கு முக்கிய காரணங்களாக இருந்தன என்று சிலாங்கூர் ஹராப்பான் தலைவருமான அவர் சொன்னார்.

வேட்பாளரின் தேர்வு ஒரு முக்கியமான காரணமாகும். இருப்பினும், முந்தைய மூன்று தவணைகளில் ஹராப்பான் புரிந்த சாதனையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles