
காஜாங் ஏப்ரல் 29-
ஆசிரியர் கணேஷ் இராமின் ‘புதிய பாதை எனும் நூலை மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.
காஜாங், சுங்கை சுவாவில் உலுலங்காட் மைபிபிபி தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மைபிபிபி கட்சியின் சிலாங்கூர் மாநில தலைவருமான டாக்டர் சுரேந்திரன் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
சிறப்பு வருகை புரிந்த மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் நூல்களை வெளியீடு செய்து ஆதரவு வழங்கினார்.
ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளில் அறிவியல் புத்தாக்கத் தகவல்களை உள்ளடக்கிய இந்நூல்களைப் படைத்த ஆசிரியர் கணேஷ் இராமைப் பாராட்டியதோடு தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்
தலா ஒரு நூல் என சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்நூல்களை மைபிபிபி சிலாங்கூர் மாநிலம் வழங்கியுள்ளது..
இந்நூல்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத் துணைத் தலைவரும் செந்தோசா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருமான தமிழரசு சுப்பிரமணியத்திடம் இந்த நூல்கள் ஒப்படைக்கப்பட்டன.
மைபிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்திய சுதாகரன் உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

