
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 29-
96 ஆண்டுகள் வரலாறு கொண்ட சிலாங்கூர் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தேர்தலில் நேற்று ஆறு மகளிர்கள் வெற்றி பெற்றனர்.
ராஜசேகரன் அணி சார்பில் டாக்டர் சித்ரா, பாவ்சியா பிபி மற்றும் டாக்டர் நவமணி ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
அதேசமயம் நிவாஸ் ராகவன் அணி சார்பில் மோகனா சின்னத்தம்பி, அமுதா முனியாண்டி மற்றும் சண்முக பிரியா ஆகியோர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

