
செ.வே. முத்தமிழ் மன்னன்
பெட்டாலிங் ஜெயா ஏப்ரல் 29-
சிலாங்கூர் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்க தேர்தலில் தலைவராக நிவாஸ் ராகவன் வெற்றி பெற்று மீண்டும் தலைவராக தேர்வு பெற்றார்.
இவருக்கு மொத்தம் 249 வாக்குகள் கிடைத்தன.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட. விகேகே ராஜசேகரன் 244 வாக்குகள் கிடைத்தன. இறுதியில் வாக்குகள் வித்தியாசத்தில் நிவாஸ் வெற்றி பெற்றார்.
துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜசேகரன் அணியைச் சேர்ந்த பிரபாகரன் 256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட நிவாஸ் அணியைச் சேர்ந்த குமரகுருவுக்கு 235 வாக்குகள் கிடைத்தன.
உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜசேகரன் அணியைச் சேர்ந்த சி. பன்னீர் செல்வம் 288 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட நிவாஸ் அணியைச் சேர்ந்த டத்தோ ஜி. சந்திரசேகரன் 200 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.
பொருளாளர் பதவிக்கு நேரடி போட்டி நிலவியது. இதில் நிவாஸ் அணி சார்பில் போட்டியிட்ட டத்தின் மகேஸ்வரி 232 வாக்குகள் பெற்று அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ராஜசேகரன் அணி சார்பில் போட்டியிட்ட
செல்வராஜ் 257 வாழ்த்துக்கள் வாக்குகள் பெற்று பெற்று வெற்றி பெற்றார்.
14 உச்சமன்ற பதவிகளுக்கு விவிகே ராஜசேகரன் மற்றும் நிவாஸ் ராகவன் அணி போட்டியிட்டது.
இதில் ராஜசேகரன் அணி சார்பில் பிரவின் தமிழ் செல்வம் 288 வாக்குகள், டாக்டர் சித்ரா தேவி 266 வாக்குகள், டோனி கிளிபெர்ட் 265 வாக்குகள், பாவ்சியா பிபி 265 வாக்குகள், இஞ்சினியர் பிரபாகரன் 260 வாக்குகள் டாக்டர் நவமணி 263 வாக்குகள், டாக்டர் இராஜசேகர் மோகன் 249 வாக்குகள், குட்டி கிருஷ்ணன் நாயர் 243 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
நிவாஸ் அணி சார்பில் கவிமாறன் என்ற குமரன் 256 வாக்குகள், மோகனா சின்னத்தம்பி 247 வாக்குகள், அமுதா முனியாண்டி 238 வாக்குகள், ராம்குமார் தனஸ்கோடி 238 வாக்குகள் மற்றும் சண்முக பிரியா 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

