சிலாங்கூர் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தில் முக்கிய பதவிகளைராஜசேகரன் அணி கைப்பற்றியது!

செ.வே. முத்தமிழ் மன்னன்

பெட்டாலிங் ஜெயா ஏப்ரல் 29-
பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் நேற்று சிலாங்கூர் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு கடுமையான போட்டி நிலவியது.

நடப்பு தலைவர் நிவாஸ் ராகவன் அணியை எதிர்த்து துணை தலைவர் வி.கே.கே. இராஜேந்திரன் அணி போட்டியிட்டது.

தலைவர் பதவி தேர்தலில் நிவாஸ் ராகவன் 5 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதவியை தற்காத்துக் கொண்டார்.

ஆனால் துணை தலைவர், உதவித் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளை ராஜசேகரன் அணி கைப்பற்றியது.

துணை தலைவராக பிரபாகரன், உதவித் தலைவராக பன்னீர் செல்வம், பொருளாளராக செல்வராஜ் வெற்றி பெற்று பரபரப்பை ஏற்படுத்தினர்.

நிவாஸ் ராகவன் அணியில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட குமரகுரு, உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டத்தோ சந்திரசேகர் மற்றும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நடப்பு பொருளாளர் டத்தின் மகேஸ்வரி ஆகியோர் தோல்வி கண்டனர்.

அதேபோல் 14 உச்சமன்ற பதவிகளுக்கும் கடுமையான போட்டி நிலவியது.

இதில் எட்டு பதவிகளை ராஜசேகரன் அணி கைப்பற்றியது.
ஆறு இடங்களை நிவாஸ் ராகவன் அணி வென்றது.

ஆக மொத்தம் தலைவர், துணை தலைவர், உதவித் தலைவர், பொருளாளர், 14 உச்சமன்ற உறுப்பினர்கள் பதவி என்று மொத்தம் 18 பதவிகளில் ராஜசேகரன் அணி 12 இடங்களை வென்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles