சிலாங்கூர் மாநில ம.இ.கா. இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

காளிதாஸ் சுப்ரமணியம்

கூடிய விரைவில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில ம.இ.கா. இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

நேற்று ம.இ.கா. தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற இந்த வேட்புமனு தாக்கல் நிகழசியை சிலாங்கூர் மாநில ம.இ.கா. தொடர்பு குழு தலைவர் எம்.பி.ராஜா தலைமையேற்றார்.

சிலாங்கூர் மாநிலத்தின் 22 ம.இ.கா. இளைஞர் பிரிவு தொகுதி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்காகத் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.

14 தொகுதிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களில் சுந்தரம் குப்புசாமி 4ஆவது முறையாக அம்பாங் தொகுதி இளைஞர் பிரிவு தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

அதே வேளையில், ஆறு தொகுதிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் பொறுப்புக்குப் போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் நடைபெற்ற இந்த வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில ம.இ.கா. துணைத் தலைவர் டத்தோ ரவிச்சந்திரனும் கலந்து கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles