மே 5 இல் கோல குபு பாரு கிங் மிங் சீனப்பள்ளி மண்டபத்தில் இலவசமருத்துவ விழிப்புணர்வு முகாம் !

மா. பவளச்செல்வன்

பத்தாங் காலி ஏப்ரல் 29-
இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம் வரும் மே 5ஆம் தேதி காலை 9 மணி முதல் 1 மணி வரை கோல குபு பாரு கிங் மிங் சீனப்பள்ளி மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

இம்மருத்துவ முகாம் இங்குள்ள மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று உலுசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.

எஸ்.பி. கேர் .மருத்துவ குழுமம் இம் முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மருத்துவ
இலவச மருத்துவ முகாமில் பெகா பி40 சோதனை, கண், புற்றுநோய் சோதனைகள், ரத்த தான முகாம், மனநல பாதிப்பு , இனிப்பு நீர் ஆகியவை இதில் அடங்கும்.

முதலில் வரும் 300 பேருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். அதே வேளையில் அதிர்ஷ்ட குலுக்கலும் நடத்தப்படும்.

உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பயனாக இருக்கும் இம் மருத்துவ முகாமில் சுற்றுவட்டார மக்கள் திரளாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles