
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு ஏப் 29-
கோல குபு பாரு இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது
ஒற்றுமை அரசின் தேர்தல் இயந்திரத்திற்குக் கிடைத்து வரும் ஆதரவு எதிர்க்கட்சியைக் குறைத்து மதிப்பிடும் அளவீடாக ஒருபோதும் இருக்கக்கூடாது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி கேட்டுக் கொண்டார்.
முடிந்தவரை அதிகமான வாக்காளர்களைக் கவரும் இலக்கை அடைவதற்கு ஏதுவாக தேர்தல் இயந்திரமும் பிரச்சார திட்டமிடலும் சிறப்பாக இருப்பதை தாம் உறுதி செய்ய வேண்டும்.
பிரச்சார தினமான இரண்டாம் நாளான இன்று தொடங்கி மே 10 ஆம் தேதி
இரவு வரை நமது பிரச்சார நடவடிக்கைகளின் தீவிரம் நாளுக்கு நாள்
அதிகரித்த வண்ணம் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

