
ஜோகூர் பாரு, மே 2- வேலை வாய்ப்பு மோசடி மற்றும் போலி முதலீட்டுத் திட்டத்தில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 11 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜோகூர் பாரு மாநகரில் உள்ள இரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 28 முதல் 45 வயது வரையிலான ஒரு பெண் உள்ளிட்ட ஒன்பது அந்நியப் பிரஜைகளும் இரு உள்நாட்டினரும் அடங்குவர் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் சி.பி. எம். குமார் கூறினார்.
bernama

