ஸ்ரீ குழந்தை வடிவேலன் இயக்கத்தின் 80ஆவது இரத்ததான முகாம் விமரிசையாக நடைபெற்றது!

செ.வே. முத்தமிழ் மன்னன்

செராஸ், மே 2-
சர்வதேச உடல் உறுப்பு தானத்தை முன்னிட்டு ஸ்ரீ குழந்தை வடிவேலன் இயக்கத்தின் 80ஆவது சுகாதார முகாமினை, இயோன் வணிக வளாகம் செராஸ் செலாத்தானில் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தது.

இந்த முகாமில் இயோன் வணிக வளாகம் செராஸ் செலாத்தான், தேசிய புற்றுநோய் கவுன்சில் (MAKNA), MEDI’QPRO செமினி சிகிச்சையகம், தேசிய மாற்று அறுவை சிகிச்சை மையம் மற்றும் கொலம்பியா மருத்துவ மையம் ஆகியவையும் இணைந்தன.

27 ஏப்ரல் 2024 மற்றும் 28 ஏப்ரல் 2024 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த இரத்த தான முகாம் நடைபெற்றது.

தேசிய மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் இயக்குனர் முகமது மஸ்ரின் பின் முகமது சஹரின், PDN -னின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், டாக்டர் தேவேந்திரன்
(காஜாங் மருத்துவமனையின் பார்வையாளர்கள் குழும உறுப்பினர்), டாக்டர். கௌரி, டாக்டர்.ரவிவர்மா, டாக்டர்.ரித்து, பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஒய்பி துவான் ஷரிட்சான் பின் ஜோஹான், டத்தோ டாக்டர் என்.கே.சுந்தரம் ஆகியோரோடு கைகோர்த்து சிறப்பாக நடந்தேறியது.

இத்திட்டத்தின் மூலம் 600க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

இதற்கிடையே, இந்த முகாமின் வழி 300 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்து இன்நிகழ்வினை வெற்றி பெற செய்தனர்.

இந்த 80ஆவது சுகாதார முகாம் வெற்றியடையச் செய்த இரத்த தானம் செய்தவர்களுக்கும், சுகுவாட்ஸ் உறுப்பினர்கள் மற்றும் கரம் சேர்த்த அனைத்து நிறுவனங்களுக்கும் தன் நெஞ்சார்த்த நன்றியினை மலேசியாவின் சுகுவாட்ஸ் அமைப்பின் தேசிய தலைவர் கலைமாமனி டாக்டர் Rpகண்ணன் ராமரு தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles