அரசு துறையினருக்கான சம்பள உயர்வை விவாதப் பொருளாக்க வேண்டாம்

உலு சிலாங்கூர், மே 2- நேற்று அனுசரிக்கப்பட்ட தொழிலாளர் தினத்தை
முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை யாரும் விவாதப் பொருளாக்கக்
கூடாது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நாட்டிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் அரசாங்கம் மதித்து வருவதோடு உற்பத்தி அதிகரிப்பக்கு ஏற்ப தனியார் துறை ஊழியர்களும் உயர்ந்த பட்ச சம்பளத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்காக முற்போக்கு சம்பளக் கொள்கையின் கீழ் குறைந்த பட்ச சம்பள முறையை அது மறு ஆய்வு செய்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் முன்களப் பணியாளர்களாக அரசாங்க ஊழியர்கள் விளங்குகின்றனர். நாட்டின் பொருளாதாரம் துடிப்புமிக்கதாக இருப்பதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு உயரிய ஆற்றலும் ஆக்கத்திறனம் கொண்ட அரசு ஊழியர்கள் நமக்குத் தேவை என்று அவர்
சொன்னார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles