
காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
செராண்டா, மே 2-
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தொடங்கியுள்ள Suara Perpaduan Broadcast ஒளிபரப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
செராண்டா அந்தாரா காப்பியில் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் கெஅடிலான் சேவை மையத்தில் இன்று Suara Perpaduan ஒளிபரப்பை அவர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலு சிலாங்கூர் தொகுதி மக்களுக்கு தகவல்களை நேரடியாக தெரிவிக்கும் வகையில் இந்த ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் கொண்டு வரும் திட்டங்கள் மூலம் எப்படி பயனடையலாம் என்பதும் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்று டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா கூறுகையில் இந்த ஒளிபரப்பு திட்டத்தை பெரிதும் வரவேற்றார்.

