
காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்
செராண்டா, மே 2-
அன்று நம்மோடு நண்பர்களாக இருந்தவர்கள் இன்று எதிரிகளாக இருக்கிறார்கள்.
ஆகவே யார் எதைச் சொன்னாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் என்று டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா கேட்டுக் கொண்டார்.
இன்று கோலகுபு பாருவுக்கு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா, சிலாங்கூர் மாநில கெஅடிலான் தொகுதி இந்திய தலைவர்கள் மற்றும் கிராம தலைவர்களை சந்தித்து உரையாடினார்.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலவரங்கள் குறித்து உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் அவருக்கு விளக்கம் அளித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் வெற்றிக்கு கடுமையாக உழைக்கும்படி பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கேட்டுக் கொண்டார்.
அன்று நம்மோடு நண்பர்களாக இருந்தவர்கள் இன்று எதிரிகளாக இருக்கிறார்கள்.
அவர்கள் சொல்வதை பொருட்படுத்தாமல் இங்குள்ள வாக்காளர்கள் குறிப்பாக இந்திய வாக்காளர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பு கூட்டத்தில் செந்தோசா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், கவுன்சிலர் பாலமுரளி, புவனேவரன் பச்சைமுத்து, சுரேஸ், இராஜன் முனுசாமி, பிரதமர் துறை சிறப்பு செயலாளர். டத்தோ அஸ்மான் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

