
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலகுபு பாரு மே 2-
கோல குபு பாரு இடைதேர்தல் நடப்பு அரசாங்கத்தை பரிசோதிக்கும் களமாக மாறியுள்ளது என்று அரசியல் ஆய்வாளர் சந்திரசேகரன் ஆறுமுகம் கூறுகிறார்.
இந்த தேர்தலின் முடிவை தெரிந்து கொள்ள மொத்த மக்களே எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோல குபு பாரு இடை தேர்தலின் முடிவே இந்த மடானி அரசாங்கத்தின் மீது மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது ஒரளவு கணிக்க முடியும்.
பலவிதமான விமர்சனகங்களுக்கு ஆளாகி கொண்டியிருக்கும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்திற்கு இந்த இடைதேர்தல் மிக மிக முக்கியம் வாய்ந்தது என்றால் அதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
நாட்டு மக்கள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் அரசாங்கத்தின் மீது எந்த அளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதனை பரிசோதிக்கும் அளவு கோலாக இது விளங்குகிறது.
கடந்த 70-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு 80-ஆம் காலகட்டத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற இடைதேர்தல்களின் முடிவை ஆய்வு செய்தால் அப்போதைய நடப்பு அரசாங்கத்திற்கே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்துள்ளது.
இனி அந்த பொற்காலம் அமையுமா என்று கேட்டால் அது மலையேறி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் அரசாங்கத்தின் செயல்படுகள் மக்களுக்கு உடனுக்குடன் தெரிந்து விடுவதால் அரசாங்கத்திற்கு அது ஒரு பெரிய சவாலாக அமைந்து விடுகிறது.
ஒரு பக்கம் பக்கத்தான் ஹராப்பானுக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது
மறுபக்கம் சிலாங்கூர் மாநில அரசு மாநில மக்களுக்கு அதிக அளவில் சேவையாற்றி உள்ளது.
எந்தவொரு இனமும் புறக்கணிக்கப்படாமல் சிலாங்கூர் மாநில அரசு அனைவரையும் அரவணைத்துள்ளது.
இது பக்கத்தான் ஹராப்பான் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கலாம்.
இருப்பினும் இன்னும் சில தினங்களே இருப்பதால் பிரச்சாரம் சூடு பிடிக்கலாம்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கெனவே இரண்டு சட்டமன்ற தொகுதிகளை பெரிக்கத்தான் நேஷனல் வென்றுள்ளது.
எஞ்சியுள்ள இந்த கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

