ஊழல் இல்லாத ஆட்சி மலர
பக்கத்தான் ஹரப்பானுக்கு
வாக்களியுங்கள்!
இளம் கெஅடிலான் தலைவர் தமிழரசு வேண்டுகோள்

ஊழல் இல்லாத ஆட்சி மலர மலேசியர்கள் பக்கத்தான் ஹரப்பானை வெற்றி பெற செய்யும் படி சிலாங்கூர் மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு உச்சமன்ற உறுப்பினர் தமிழரசு தமிழ்க்கலை கேட்டுக் கொண்டுள்ளார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி வரும் நவம்பர் 19 ஆம் தேதி மலர வேண்டும்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவி ஏற்கும் பட்சத்தில் மலேசியா இந்தியர்களுக்கும் பொற்காலம் பிறக்கும் என்று அவர் சொன்னார்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் மனம் தளராமல் பக்கத்தான் ஹரப்பானை ஆதரித்து நாடு தழுவிய அளவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும்படி தமிழரசு கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles