
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதி மஇகா வுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பரபரப்பான செய்தியை மலேசியன் கெஸாட் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
பத்து நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பிரபாகரன் போட்டியிடுகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி மக்களுக்கு பிரபாகரன் சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கிறார்.
பத்து நாடாளுமன்ற தொகுதி
மஇகாவுக்கு வழங்கப்பட்டால் விலாயா மாநில ம இகா தலைவர் சைமன் ராஜா போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே மக்கள் சக்தி கட்சிக்கு நிபோங் திபால் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
கிம்மா கட்சிக்கு கெப்போங் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
நவம்பர் 2 ஆம் தேதி தேசிய முன்னணி வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்படுவதால் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது தெரிந்து விடும்.

