
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பாரிசான் நேசனல் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் நாளை நவம்பர் ஒன்றாம் தேதி போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்களை அறிவிக்கிறது.
நாளை இரவு 8.30 மணிக்கு புத்ரா உலக வாணிப மையத்தில் பாரிசான் நேசனல் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவிக்கிறார்.
அதே நேரத்தில் ஜாலான் டூத்தா மேடேக் அனைத்துலக வர்த்தக மையத்தில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அறிவிப்பு செய்கிறார்.

