
தேசிய முன்னணி சார்பில் போட்டியிட ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் சஹிடான் காசிம் தேர்வு செய்யப்படவில்லை என்ற காரணத்தால் ஆராவ் தேசிய முன்னணி தேர்தல் நடவடிக்கை அறைகள் இழுத்து மூடப்பட்டன.
பெர்லிஸ் ஆராவ் நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து தேர்தல் நடவடிக்கை அறைகளை உடனடியாக இழுத்து மூடுகிறோம்.
அனைத்து தேசிய முன்னணி கொடிகள் கீழே இறக்கப்படுவதாக அவர் சொன்னார்.
இன்றைய இரவு மிகவும் வேதனையானது மற்றும் சோகமானது என்று அவர் சொன்னார்.
இதனிடையே கிளாந்தான் மாநில கெத்தாரே நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அனுவார் மூசாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

