
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ சார்பில் போட்டியிட பத்து அம்னோ தலைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால்
இன்றிரவு 8.30 மணிக்கு தேசிய முன்னணி மற்றும் அம்னோ வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.
தஞ்சோங் காராங் எம்பி நோர் ஓமார், பாசிர் சாலாக் எம்பி தாஜூடீன் அப்துல் ரஹ்மான், தெக்காரா எம்பி டாக்டர் அடாம் பாபா, கோத்தா திங்கி எம்பி ஹலிமா, கெத்தாரே எம்பி அனுவார் மூசா, கோல கங்சார் எம்பி மாட்சூரா, ஆராவ் எம்பி சஹிடான் காசிம் உட்பட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேட்பாளர்கள் பெயர் பட்டியலில் இவர்கள் பெயர் இல்லை என்று கூறப்படுகிறது.

