
காளிதாஸ் சுப்ரமணியம்
சுங்கை திங்கி மே 6-
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஐந்து தோட்டங்களை சேர்ந்த 245 பாட்டாளிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் புதிய தரை வீடுகளில் குடியேறவுள்ளனர்.
பெர்ஜெயா மேம்பாட்டு நிறுவனம் வழங்கிய 20 ஏக்கர் நிலப்பரப்பில் 245 தோட்ட பாட்டாளிகளுக்கு தரை வீடுகள் கட்டப்படும் என்ற இனிப்பான செய்தியை வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் இன்று அறிவித்தார்.

26 ஆண்டுகால உங்களின் போராட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நீங்கள் எல்லாம் புதிய தரை வீடுகளில் குடியேறி விடுவீர்கள்.
புதிய வீட்டில் தீபாவளியை கொண்டாடும் போது என்னையும் அழையுங்கள்.
நான் கண்டிப்பாக உங்கள் வீடுகளை தேடி வருவேன் என்று அவர் நகைச்சுவையாக குறிப்பிட்ட போது தோட்டப் பாட்டாளிகள் கைத்தட்டி வரவேற்றனர்.

