புக்கிட் செந்தோசா இந்து சங்க வட்டார பேரவை சொந்த கட்டடத்தை பெற்றது பாராட்டுக்குரியது!

மா பவளச்செல்வன்

கோலகுபு பாரு மே 6-
புக்கிட் செந்தோசா வட்டாரப் பேரவை மலேசிய இந்து சங்கம் பல போராட்டங்களுக்கு பிறகு சொந்த கட்டடத்தை பெற்றது பாராட்டுக்குரியது என்று மூடா கட்சியின் சிலாங்கூர் மாநில துணை தலைவர் மற்றும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி மூடா கட்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சிவப்பிரகாஷ் தெரிவித்தார்.

சங்கத்தின் தலைவர், திரு.இராதாகிருஷ்ணன்,, செயலாளர் பாலு , ஆலோசகர் தொண்டர்மணி கனமூர்த்தி அரிகிருஷ்ணன், பேரவையின் நிர்வாகத்தினர் மற்றும் அங்கத்தினர்களின் அர்ப்பணிப்பு , மிகவும் அளப்பரியது.

இன்று பேரவைக்கு என்று சொந்தமான நிலையத்தை வாங்கி கட்டடம் எழுப்பிய சாதனை படைத்துள்ளனர்.

இவர்களுடன் இனணந்து மக்கள் நல நடவடிக்கைகள் செயல்பட எனக்கு வாய்ப்புகள் அளித்தமைக்கும், இத்திறப்பு விழாவிற்கு அழைத்தமைக்கும் நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கடந்த தேர்தலில் கோலகுபு பாருவில் மூடா கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் சிவப்பிரகாஷ் தெரிவித்தார்.

இந்த உன்னத முயற்சிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிய வட்டார அன்பர்கள் அனைவருக்கும் நன்றி் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles