
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் மே 7-
இன்று மாலையில் கனத்த காற்றுடன் பெய்த மழையால் கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் உள்ள பெரிய மரம் வேரோடு சாய்ந்தது.
இந்த மரம் மோனோ ரயில் தண்டவாளத்தின் மேல் விழுந்ததால் அந்த தண்டவாளம் முற்றாக சேதமடைந்தது.இந்த சம்பவத்தில் பல கார்கள் சேதமற்றதாக கூறப்படுகிறது.
கோலாலம்பூர் பிரபல தங்கும் விடுதி எதிர் புறத்தில் நடந்த இந்த சம்பவத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மோனோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

