
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் மே 7-
நாட்டில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் இணையத்தள ஆசிரியர்கள், நிருபர்களுடன் தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் இன்று முக்கிய சந்திப்பை நடத்தினார்.
பங்சார் பாலா வாழை இலை உணவக மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில் மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர். இராஜன் மற்றும் மலேசிய நண்பன், தமிழ் மலர் நாளிதழ் நிருபர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தினத்தந்தி ஆசிரியர் முத்தமிழ் மன்னன், வணக்கம் மலேசியா ஆசிரியர் தியாகராஜன், தேசம் ஆசிரியர் குணாளன் மணியம், தமிழ் லென்ஸ் ஆசிரியர் வெற்றி விக்டர், நம்பிக்கை ஆசிரியர் தயாளன் சண்முகம், தினத்தந்தி இணையதளத்தின் மூத்த நிருபர் காளிதாஸ் சுப்ரமணியம், பெர்னாமா தமிழ் பிரிவு ஆசிரியர் வனிதா உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
தமிழ்ப் பத்திரிகை மற்றும் தமிழ் இணையத்தளங்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளை குறித்து அமைச்சர் பாமி பட்சில் கேட்டறிந்தார்.
தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அடையாள அட்டை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பத்திரிகை சுதந்திரம் குறித்தும் நிருபர்கள் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: @ipptar_rasmi

