பக்கத்தான் ஹராப்பான் மட்டுமே சரியான தேர்வு! பத்து காஜா எம்பி சிவகுமார் அறிவிப்பு

செ.வே. முத்தமிழ் மன்னன்

கோலாலம்பூர் மே 8-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவை அமோக வெற்றி பெற செய்யுங்கள் என்று கோலகுபு பாரு வாக்காளர்களை பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆட்சியில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தால் மட்டுமே நாட்டு மக்களுக்கு உதவ முடியும்.

அந்த வகையில் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோலகுபு பாரு மக்களுக்கு இன்னும் அதிக அளவில் உதவிகள் தேவைப்படுகிறது.

இந்த தொகுதியில் பாக் சோக் தாவ் வெற்றி பெற்றால் மட்டுமே அதிக உதவிகள் கிடைக்கும் என்றார் அவர்.

26 ஆண்டுகளாக ஐந்து தோட்டங்களை சேர்ந்த 245 பாட்டாளிகள் எதிர் நோக்கி வந்த வீடமைப்பு திட்டத்திற்கு வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு ஆகியோர் நல்ல முறையில் தீர்வு கண்டுள்ளனர்.

ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த பாட்டாளிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் புதிய தரை வீடுகளில் குடியிருப்பார்கள். இது ஒரு வரலாற்று சாதனை என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிக அளவில் உதவி வருவதை இங்குள்ள இந்தியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரும் மே 11 ஆம் தேதி கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் அதிக வாக்குகளில் வெற்றி பெறுவதை இந்தியர்கள் உறுதி செய்யும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles