
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 8
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்தியர்களின் ஆதரவு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
நேற்று கெர்லிங் தோட்ட மக்களை நேரில் சந்தித்து பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவுக்கு அவர் ஆதரவை திரட்டினார்.
சிலாங்கூர் மாநில அரசு இந்தியர்களுக்கு அதிக அளவில் மானியம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி மீண்டும் பக்கத்தான் ஹராப்பான் வசம் இருக்க இந்தியர்கள் முழு ஆதரவு வழங்குவார்கள் என்று அவர் சொன்னார்.
உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேவரன் பச்சைமுத்து உட்பட பலரும் இந்த பிரச்சாரத்தில் களம் இறங்கினர்.

