
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 12-
கோல குபு பாருவின் அனைத்து மக்களுக்குமான பிரதிநிதியாக செயல்படுவேன். அரசியல், இன பேதமின்றி சேவையாற்றுவேன் என்று கோல குபு பாரு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாங் சோக் தாவ் கூறினார்.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது வெறும் மகிழ்ச்சி அளிக்கிறது.
என்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு பொறுப்புள்ள சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் உடனடியாக கோலகுபு பாருவுக்கு மாறி வருவேன்.
அனைத்து இன மக்களுக்கும் சிறந்த முறையில் சேவையாற்றுவேன் என்று வெற்றி பெற்ற பின்னர் பாங் நிருபர்களிடம் தெரிவித்தார்.

