கோலாலம்பூர் மே 14-
அதிக ஆபத்து நிறைந்த மரங்களை வெட்டும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு விலாயா மாநில அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தபா இன்று உத்தரவு பிறப்பித்தார்.
சுற்றுச்சூழல் நிலை தன்மைக்கு ஏற்ப மீண்டும் மரங்களை நடும் திட்டத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஒரு வாரத்தில் பெய்த அடை மழையால் தலைநகரில் மரங்கள் விழுந்த சம்பவத்தில் பல வாகனங்கள் கடுமையாக சேதம் அடைந்தன.
பெர்னாமா