தேசிய முன்னணியில் இடம் பெற்றுள்ள மஇகாவை எப்போதும் அம்னோ மதிப்பதே இல்லை.
அதனால்தான் தேசிய முன்னணி
ம இகாவை மதிக்காமல் கிம்மா, ஐபிஎப் மற்றும் மக்கள் சக்தி கட்சிக்கு தொகுதிகளை வழங்கி இருக்கிறது என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
தேசிய முன்னணியில் ஒரு கட்சி இணைய வேண்டும் என்றால் அனைத்து கட்சிகளின் ஆதரவு இருக்க வேண்டும். ஒரு கட்சி எதிர்த்ததால் கூட இணைய முடியாது.
ஆனால் இப்போது
மஇகாவை மதிக்காமல் அம்னோ தனது அதிகாரத்தை காட்டிவிட்டது.
தேர்தலில் போட்டியிடும் கிம்மா , ஐபிஎப் மற்றும் மக்கள் சக்தி கட்சி தனது வைப்புத் தொகையை தற்காத்து கொள்ளுமா என்பது வேறு கதை.
ஆனால் தேசிய முன்னணி வேட்பாளர்கள் அறிவிப்பு கூட்டத்தை ம இகா நேற்று புறக்கணித்து ஒரு நாடகமே என்று அவர் சாடினார்.
ம இகா வுக்கு பத்து நாடாளுமன்ற தொகுதிகள் வழங்கப்பட்டாலும் அதில் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும் என்பதும் கேள்விக்குறியே என்று அவர் சொன்னார்.