
கோலாலம்பூர், மே 17 – டேஷ்கேம் எனப்படும் வாகனங்களின் எதிரே உள்ள காட்சிகளைப் பதிவு செய்யும் கேமராக்களை பொருத்துவதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
அமைச்சு பல பரிந்துரைகளைப் பெற்றிருந்தாலும் டேஷ்கேம் பொருத்துவதைக் கட்டாயமாக்கினால் பொதுமக்களுக்கு உண்டாகக்கூடிய செலவுகள் போன்ற அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் சொன்னார்.
இருப்பினும், டேஷ்கேம்களை உற்பத்தியாளர்கள் வாகனங்களில் பொருத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
அவர்கள் (வாகன உற்பத்தியாளர்கள்) தங்கள் புதிய கார்களில் அவற்றை (டேஷ்கேம்கள்) பொருத்தினால் நாங்கள் அதனை பெரிதும் ஊக்குவிப்போம். ஆனால் இதுவரை நாங்கள் அதனை கட்டாயமாக்கவில்லை என்று அவர் சொன்னார்.
bernama

