
ஜோகூர் பாரு, மே 19- நாட்டில் ஜெமா இஸ்லாமியா (ஜே.ஐ.) அமைப்பின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உத்தரவாதம் அளித்துள்ளார்.
ஜோகூர், உலு திராமில் நிகழ்ந்ததைப் போன்ற சம்பவங்களை கையாள்வதில் உதவக்கூடிய அளவுக்கு போதுமான தரவு மையத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்று அவர் சொன்னார்.
இது போன்ற சம்பவங்களை கையாள்வதற்கு தேவையான தரவு மையம் எங்களிடம் உள்ளது. இத்தகைய நடவடிக்கைளில் ஈடுபட்டதற்காக சொஸ்மா (2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைத் தடுப்புச் சட்டம்) கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களின் பின்னணியை நாங்கள் வைத்துள்ளோம்.
அத்தகைய தரப்பினர் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இல்லாதிருப்பதைக் உறுதி செய்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு மறு வாழ்வளிக்கும் அணுகுமுறையை கடைபிடிப்பதில் காவல்துறை கவனம் செலுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

