உலுதிராம் காவல் நிலையத் தாக்குதல்- சிங்கை பிரஜை உட்பட எழுவருக்கு ஒரு வாரம் தடுப்புக் காவல்

ஜோகூர் பாரு, மே 18 – நேற்று அதிகாலை உலு திராம் காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக சிங்கப்பூர் பிரஜை உட்பட 7 பேர் இன்று முதல் வெள்ளிக்கிழமை (மே 24) வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்ப
ட்டுள்ளனர்.

குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக மாஜிஸ்திரேட் ஹிதாயத்துல் ஷியுஹாடா சம்சுடின் ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் தடுப்புக் காவல் விண்ணப்பத்தை அனுமதித்தார்.

தடுத்து வைக்கப் பட்டுள்ளவர்களில் சந்தேக நபரின் குடும்பத்தைச் சேர்ந்த 19க்கும் 62 வயதுக்கு இடைப்பட்ட ஐவரும் அடங்குவர். சந்தேக நபரின் வீட்டில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் நடந்த போது காவல் நிலையத்தில் இருந்த உள்ளூர்வாசிகளான 21 மற்றும் 22 வயதுடைய இரண்டு கல்லூரி மாணவர்களும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles