
காளிதாஸ் சுப்ரமணியம்
உலுசிலாங்கூர், மே 19-
இன்று சிலாங்கூர் மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் ம.இ.கா.வின் தொகுதித் தேர்தல் நடைபெற்றது.
அவ்வகையில் ம.இ.கா. உலுசிலாங்கூர் தொகுதியில் நடைபெற்ற தொகுதித் தேர்தலில் 9 வாக்க்குகள் வித்தியாசத்தில் டத்தோ சுரேஷ் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட டத்தோ மூர்த்தி 14 வாக்குகள் பெற்றிருந்த வேளையில் டத்தோ சுரேஷ் 23 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதனடிப்படையில் டத்தோ சுரேஷ் 2024- 2027 தவனைக்கான ம.இ.கா. உலுசிலாங்கூர் தொகுதித் தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

