
கோலாலம்பூர், மே 19-
ஜோகூர் மாநிலத்தின் உலு திராம் போலீஸ் நிலையத் தாக்குதல் தொடர்பில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் உள்நாட்டினர் என்பதை தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் தெளிவுபடுத்தினார்.
ஊடகங்களில் செய்தி வெளியிட்டதைப் போல் இச்சம்பவம் தொடர்பில் சிங்கப்பூரர்கள் யாரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.
இந்த தாக்குதல் தொடர்பில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு நேற்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 19 முதல் 62 வயது வரையிலான அனைவரும் உள்நாட்டினர் என்பதோடு ஊடகச் செய்திகள் கூறுவது போல் இதில் சிங்கை பிரஜைகள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
பெர்னாமா

