பேராக் மாநில தமிழ் பள்ளி கூட்டுறவு கழகம்60 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்தது!

காளிதாஸ் சுப்ரமணியம்

சிம்பாங் பூலாய், மே. 22:
அமரர் போ.ஐயாக்கண்ணு கடந்த 1964 ம் ஆண்டில் இந்த பேராக் மாநில இந்தியப்பள்ளி கூட்டுறவு் கழகத்தை தோற்றுவித்தார்.

அவரின் முயற்சியாலும் அன்றைய இந்திய ஆசிரியர்களின் பேராதரவால் இக்கூட்டுறவு கழகம் 60 ம் ஆண்டை வெற்றிகரமாக எட்டியுள்ளது என்று பேராக் மாநில இந்தியப்பள்ளி கூட்டுறவு கழகத்தின் தலைவர் விஜயன் சின்னப் பையன் கூறினார்.

கடந்த இரு ஆண்டுகளாக போட்டியின்றி நிர்வாக குழுவினர் தேர்வு செய்யபட்டுள்ளனர். இதற்கு முதன்மை காரணம் இக்கூட்டுறவுக் கழக உறுப்பினர்கள் இந்த வாரியக்குழுவினர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என்று புலப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நமது கூட்டுறவுக் கழகம் தேசிய கூட்டுறவுக் கழக ஆணையத்தின் பல ஆலோசனைகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது.

கடந்தாண்டு ஆண்டுக்கூட்டத்தின் போது அதிகமான படிசெலவு வழங்கப்பட்டது. அதனால் பெருந்தொகையை வெளியாக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது.

அதன் விளைவாக இவ்வாண்டு
இலாப ஈவு பங்கீடு சரிந்துள்ளது. இனிவரும் காலங்களில் இவ்விவகாரத்தில் அக்கறை மேற்கொண்டு உறுப்பினர்களுக்கு இலாப ஈவு பங்கீடு அதிகரிக்க வழிவகை செய்யப்படும் என்று அவர் நம்பிக்கையுடன் எடுத்துரைத்தார்.

ஆகவே, படிச்செலவு விவகாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் ஒவ்வொரு ஆண்டும் இலாப ஈவு பங்கீட்டை அதிகரிக்க ஏதுவாக அமையும். தற்போது நமது கழகம் 8 வகையான சொத்துடைமைகளை கொண்டுள்ள்ளது.
அதாவது, 6 கட்டடங்களின் உரிமையாளராகவும் மேலும் 2 தங்கும் விடுதிகளை கெந்திங் மலையில் முதலீடாக வாங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கூட்டுறவுக் கழக உறுப்பினர்கள் ஆசிரியர்களாக உள்ளனர். இவர்கள் கடன் பெறுவதில் பல சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

அவர்களின் தேவையை அறிந்து உதவும் பொருட்டு நமது கூட்டுறவுக் கழகம் குறைந்த வட்டியில் நிறைவான சேவையை வழங்கி வருகிறது.

அதாவது 3 வகையான கடனுதவித் திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. முதலில் குறைந்த வட்டியில் கடனுதவி மேலும் காப்புறுதிக் கடன் மற்றும் வாகன வரி கடனும் வழங்கப்பட்டு வருகிறது.

இக்கடனுதவியால் உறுப்பினர்கள் நன்மையடைந்து வருவதாக அவர் விளக்கமளித்தார்.

இக்கூட்டுறவு கழகம் இன்று சிறப்பாக பீடுநடை போடுகிறது என்றால் அதற்கு முதன்மை காரணம் உறுப்பினர்களின் வற்றாத ஆதரவும், வாரியக்குழுவினர்களின் நம்பிக்கையான செயல்பாடு என்றால் மிகையாகாது.

அத்தடன், தேசிய கூட்டுறவுக் கழக ஆணையம் நமது கூட்டுறவு கழகத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கும் இவ்வேளையில் ஈப்போ கிளேபாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியரான சி.விஜயன் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாண்டும் போட்டியின்றி தலைவர் சி.விஜயன், செயலாளராக வி.கலையரசு மற்றும் பொருளாளராக ஜே. சந்தனராஜ் தேர்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles