
புத்ராஜெயா, மே 21 – நாடு முழுவதும் 1,345 கல்விக் கூடங்களில் வழங்கப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி (திவேட்) திட்டங்களில் சேருவதிலிருந்து யாரும் விடுபடமாட்டார்கள் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி உறுதியளித்துள்ளார்.
இதுவரை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 700க்கும் மேற்பட்ட படிப்புகளை மேற்கொள்ள 30,000 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தேசிய திவேட் மன்றத் தலைவருமான அவர் சொன்னார்.
எஸ்.பி.எம். அல்லது அதற்கு நிகரான கல்விச் சான்றிதழ் வேண்டும் என்ற நிபந்தனை திவேட் அமைப்பில் இல்லை என்றாலும், மலேசியர்கள் இந்நாட்டில் உள்ள திவேட் கல்வி நிறுவனங்களில் நுழைவதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றார் அவர்.
bernama

