இஸ்தானா நெகாராவில் அத்துமீறி நுழைய முயன்ற இருவருக்கு 2 மாதச் சிறைத்தண்டனை!

கோலாலம்பூர், மே 21-
மூன்று தினங்களுக்கு முன்னர் இஸ்தானா
நெகாராவில் அத்துமீறி நுழைய முயன்ற இருவருக்கு இங்குள்ள
மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதித்தது.

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை சாலே ஊடா (வயது 37) மற்றும்
அப்துல் மாலிக் அஸ் ஜூக்ருஃப் (வயது 29) ஆகிய இருவரும் ஒப்புக்
கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நுரிலியானா அப்துல் ஹலிம்
இந்த தீர்ப்பை வழங்கினார்.

கடந்த மே மாதம் 17ஆம் தேதி மாலை 4.40 மணியளவில் இஸ்தானா
நெகாராவின் கேட் 3 நுழைவாயிலில் இந்த குற்றத்தைப் புரிந்ததாக
அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அவ்விருவரின் தண்டனை கைது செய்யப்பட்ட தினமான மே 17ஆம் தேதி
முதல் தண்டனை அமலுக்கு வருவதாக மாஜிஸ்திரேட் தனது தீர்ப்பில்
கூறினார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles