
பக்கத்தான் ஹரப்பான் சார்பில் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் போட்டியிடுகிறார்.
போர்ட் கிள்ளானில் கணபதி ராவ் தேர்தல் நடவடிக்கை அறை நேற்று மாலையில் அதிகாரப் பூர்வமாக திறக்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ இந்த தேர்தல் நடவடிக்கை அறையை அதிகாரப் பூர்வமாக தொடக்கி வைத்தார்
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கும் கணபதி ராவ் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

2013 இல் கோத்தா ஆலாம் ஷா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கோத்தா ஆலாம் ஷா கிள்ளான் நகரை சுற்றியுள்ளது.
கடந்த தேர்தலில் ஷா ஆலம் கோத்தா கமுனிங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சிறந்த மக்கள் சேவையாளராக விளங்கிக் கொண்டிருக்கும் கணபதி ராவை இம்முறை ஜசெக கிள்ளான் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.