
பெர்லிஸ் ஆராவ் நாடாளுமன்ற தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் டான்ஸ்ரீ சஹிடான் காசிம் போட்டியிடுகிறார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை பெர்லிஸ் மாநில அம்னோ தலைவராக இருந்தார்.
கடந்த மூன்று பொதுத் தேர்தலில் ஆராவ் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேசிய முன்னணி சார்பில் இவர் மீண்டும் வேட்பாளராக தேர்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் ஆராவ் நாடாளுமன்ற தொகுதியில் சஹிடான் காசிம் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.