
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட சிலாங்கூர் மாநில அம்னோ தலைவர் நோர் ஓமாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தஞ்சோங் காராங்கில் நோர் ஓமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது அம்னோ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பாஸ் கட்சியில் இருந்து விலகிய திரெங்கானு கோலா நெருஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரூடின் அமான் இம்முறை அம்னோ சார்பில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.