ஈழத்தமிழர்க்கு நிரந்தரமான அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கை தீவில் அமைதியான வாழ்க்கை என்பது இல்லை :

சென்னை : ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணைய அறிக்கையின் அடிப்படையில், இலங்கை இறுதி போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக நாளேடான முரசொலி தெரிவித்துள்ளது.

ஈழத் தமிழரது எதிர்காலம் இன்னமும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அரசியல் தீர்வு எட்டப்பட்டு, உரிமைகள் பெற்ற அமைதி வழி வாழ்க்கை அமைவதற்கான அடித்தளம் இன்னமும் எட்டப்படவில்லை.

ஈழத்தமிழர் உரிமைக்கான இறுதிப் போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. போர்க்குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களும் இணைந்து தமிழ் மக்களை அழித்தொழிக்கக் காரணமாக அமைந்தது அந்தப் போர்.

இது தொடர்பாக கடந்த மே 17ம் நாளன்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது.
2009ம் ஆண்டு காலக்கட்டத்து கொடூர நிகழ்வுகளை இந்த அறிக்கை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது

. “இலங்கை உள்நாட்டுப் போரின்போது வலுக்கட்டாயமாக மாயமாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் கதி மற்றும் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து வெளியிட இலங்கை அரசு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

– முரசொலி!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles