சர்வதேச இளம் அறிவியல் புத்தாக்க போட்டியில்சுங்கை பூலோ தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சாதனை!

காளிதாஸ் சுப்ரமணியம்

சுங்கை பூலோ, மே 23-
சர்வதேச அளவில் நடைபெற்ற இளம் அறிவியல் புத்தாக்கப் போட்டியில் சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 4 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

உங்கள் வெற்றி எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்க்கிறது!

இந்தப் போட்டி முழுவதும் எங்கள் மாணவர்களுக்குப் பயிற்சியும் வழிகாட்டுதலும் அளித்த இளம் அறிவியலாளர் வகுப்பு ஆசிரியர் சண்முகத்திற்கு பள்ளி நிர்வாகமும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் எங்கள் பள்ளியின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.


இந்த சிறந்த சாதனைக்காக எங்கள் பள்ளியின் அறிவியல் குழுவிற்கு பள்ளி தனது சிறப்புப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles